G Vanaja Karthiga, II year B Com
நான் யோக் -ல் பெற்ற சில அனுபவங்கள் . சந்தோஷமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகள், நான் கற்றுக்கொண்ட நல்ல பாடங்கள், செயல்பாடுகள் நிறைய உள்ளன . அவற்றை நினைவு கூறும் முயற்சியே இந்த கட்டுரை.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு அழகிய மற்றும் பசுமை நிறைந்த ஒரு குக்கிராமம் தான் எங்கள் ஊர் கோடகநல்லூர். எங்கள் ஊர் சிறிய கிராமம் என்று சொன்னாலும் எங்கள் ஊர் பெருமை பேசும் விதமாக கோவில்கள் உள்ளன. இதையெல்லாம் தாண்டி எங்கள் ஊருக்கு என்று தனி புகழை உருவாக்கி கொடுத்த பெருமை எங்களது யோக் – அமைப்புக்கு சேரும். யோக் – அமைப்பு கல்வியை மக்களிடம் கொண்டு செல்லும் விதம் குழந்தைகளின் கல்வி , அன்பு , அறிவினை மேம்படுத்தும் இடம். அனைவருக்கும் அவசியமான கல்வியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம். இது மட்டுமின்றி கலைநிகழ்ச்சிகள் , ஆடல் , பாடல் , நாடகம், கைத்தொழில் , வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் , பெண்கல்வி , என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் ஏற்படுத்தி கற்று கொடுக்கும் ஒரு இடம் தான் எங்கள் யோக் என்று பெருமிதம் கொள்கிறேன் . இப்போது எனது மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றிச் சொல்கிறேன்.
முதலில் என் நினைவுக்கு வருவது
எங்கள் யோக்கிற்கு – நமது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐயா (அப்போது சேரன்மகாதேவி இணை கலெக்டராக இருந்தார்)அவர்கள் வந்தது . அப்போது யோக் – கோடைக்கால பயிற்சி முடிந்திருந்தது . பின்பு நிறைவு நாளன்று நான் மற்றும் பாசமிகு தம்பி மற்றும் தோழன் என்று சொல்லக்கூடிய நந்தகுமார் – நாங்கள் இருவரும் சேர்ந்து யோக் -ல் நடந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் பொறுப்பினை சித்ரா அக்கா எங்களுக்கு கொடுத்தார்கள். அந்த அனுபவம் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். நான் ஒன்றும் நல்ல பேசத்தெரிந்த பிள்ளை இல்லை. ஏதோ பேசுவேன் . என்னை முதலில் அக்கா நீ பேச வேண்டும் என்று சொன்னவுடன் “இல்லை அக்கா எனக்கு பேச தெரியாது பயமாக இருக்கு”, என்று சொன்னேன் அதற்கு அக்கா “அப்படியெல்லாம் இல்லை வனஜா, முடியும் நீ முயற்சி பண்ணிப்பார்”,என்று சொன்னார்கள் . பிறகு அக்கா எப்படி பேச வேண்டும் எழுதி கொடுத்து பேசப் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சியின் போது நான் சின்ன சின்ன தவறுகள் செய்தேன். அப்போது அக்கா அதனை சுட்டிக்காட்டி இப்படி இல்லை அம்மா இப்படி பேசு என்று சொல்லி கொடுத்தார்கள். பயிற்சியின் போது எனக்கும் இணை பங்கேற்பாளர் நந்தகுமார் தம்பிக்கும் நிறையை குட்டி சண்டைகள் வரும் . அப்போது சண்டைகளாக தெரிந்த அவை, இப்போது நினைத்தால் நகைச்சுவையாக உள்ளது .
அந்த நாளும் வந்தது. மேடையில் பேச ஆரம்பித்தோம் . அப்போதுதான் அங்கு வருகை புரிந்தார் எங்கள் இன்றைய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சார் மற்றும் அவர்களது துணைவி நந்தினி மேடம் இருவரும். மற்றும் யோக் – உள்ள அனைத்து மாணவர்கள் ஊர் பொதுமக்கள் பார்வையாளர்கள் என அனைவரும் அங்கு இருந்தார்கள் . நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தோம். அனைவருக்கும் முன் பயம் பதட்டம் இன்றி நாங்கள் மகிழ்ச்சியாக ஆக பேசினோம். நகைச்சுவையுடன் பேசினோம். பிறகு நான் பயிற்சியின் போது அக்கா எழுதி கொடுத்த குறிப்புகளை மறந்து எனக்கு அப்போது தோன்றியசெய்தியை நகைச்சுவையாக பேசினேன் அதெல்லாம் மறக்கமுடியாத நிகழ்வுகள் ஆகும் . இணை பங்கேற்பாளர் நந்த குமார் தம்பி அருமையாக பேசினான். பின்பு நாங்கள் பேசியதை அனைவரும் கைத்தட்டி பாராட்டினர். இதில் மிகவும் முக்கியமான நிகழ்வு எதுவென்றால் நாங்கள் பேசியதை விஷ்ணு சார் மற்றும் அவரது மனைவி மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர் . பிறகு நிகழ்ச்சி முடிந்த பிறகு சார் மற்றும் மேடம் எங்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்துகள் கூறினார்கள் .எங்கள் தோளினை தட்டி கொடுத்தார்கள். அந்த நிகழ்வு என் வாழ்வின் மிக முக்கியமான மறக்க முடியாத நிகழ்வு ஆகும். பிறகு நாங்கள் இருவரும் சார், மேடம் உடன் சேர்ந் து புகைப்படம் எடுத்தது இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது . அந்த புகைப்படத்தை இப்போது எடுத்து பார்த்தாலும் கூட என்னை அறியாமல் ஒரு விதமான ஆனந்தம் வருகிறது . அந்த புகைப்படம் என் வாழ்வின் மகிழ்வான தருணம் / பரிசு என்று சொல்லுவேன். அதன் பிறகு நானும் நந்தகுமாரும் நல்ல நண்பர்கள் ஆனோம்.
அடுத்ததாக என் மறக்க முடியாத நிகழ்வு எதுவென்றால் நான் 7ம் வகுப்பு படிக்கும் போதும் அக்கா எங்களை திருவனந்தபுரம் சுற்றுலா அழைத்து சென்றது. அது எனது இன்பசுற்றுலா என்று கூறலாம் . நான் அப்போது ரொம்ப குட்டி பெண்ணாக இருப்பேன். அங்கே நடந்த நிகழ்வுகள் ஏராளம், அதில் முக்கியமான மகிழ்வான சில செய்திகளை பகிர விரும்புகிறேன். நான் சிறுபிள்ளை என்பதால் என் மீது அன்பு / அக்கறையாக சித்ரா அக்கா என்னை பார்த்து கொண்டார்கள் . அக்கா மட்டும் இல்லாமல் என்னுடன் சுற்றுலாவிற்கு வந்த அக்கா / மற்றும் அண்ணா என அனைவரும் அன்புடன் அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். அந்த சுற்றுலாவில் நல்ல மகிழ்ச்சியாக இருந்தோம் அனைவரும். திருவனந்தபுரத்த%