A Rajeswari, B Com (April 2021)

சுற்றுலாஇது எல்லோருக்கும் பிடித்த வார்த்தை ஆகும். எவ்வளவு கட்டுப்பாட்டுடன்   சுற்றுலா  சென்றாலும் போன இடத்தின் அழகினை  ரசிப்பதே  அந்த கட்டுப் பாட்டை  உடைத்து விடும்அதுதான் எங்கள்  யோக் சுற்றுலா. கடலுக்கு செல்வோம், குளிக்க வேண்டாம் என்ற  எண்ணத்தில்தான் செல்வோம், ஆனால் குளிக்காமல்  வரமாட்டோம்இது போல தடைகளை   மீறுவது  கூட   மகிழ்ச்சியாக இருக்கும்  எங்கள்  யோக்  பயணத்தில்.  

இது வரை நான் யோக் மூலம் பல சுற்றுலாக்கள் சென்றுள்ளேன். அதில் முதல் சுற்றுலா மறக்க முடியாத ஒன்று.  5  நாள் கோடை  பயிற்சியில்   சென்ற மணிமுத்தாறு  சுற்றுலா தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா அப்பாவின் ஆள் காட்டி விரலை அழுத்தி பிடித்து  கொண்டு எங்கும் சென்ற எனக்கு முதல் முதலில் சுதந்திரமாக  யார்  கையும்  பிடிக்காமல் நண்பர்களுடன் சென்ற சுற்றுலா அது. பிறகு இதே போல எனக்கு கிடைத்த  ஒரு வாய்ப்பு . நம் நாட்டின் தலைநகரில் என் பாதம் பதிக்க ஒரு வாய்ப்பு.   கற்றது  கைம்மண்  அளவு, கல்லாதது உலக அளவு என்ற தத்துவத்தின்  பொருளை உணர்ந்தேன்நம் நாடு கலை, கை வண்ணம் என ஏராளமான  செயல்களில் சிறந்து விளங்குவது பற்றி அறிந்தேன். அதுவும் படித்து அல்ல என் கண்களால்  பார்த்துநான் டெல்லி சென்ற வயது மிகவும் இள  வயது என்பதால் என்னால் பல  நிகழ்வுகள்அர்த்தங்கள் எல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லைஆனால் அதை இப்போது நினைத்து பார்த்து ரசிக்கிறேன்இதே போல இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் என் பிறவி பயன்  அடைவது போல  ஆனந்தம் பெறுவேன்.  

எங்கள் வாழக்கைக்கே  அர்த்தம் கற்று   கொடுத்த எங்கள் யோக் நிறுவனத்துக்கு  எனது மனமார்ந்த நன்றி !    எங்களின் இன்னொரு உலகம், நம்பிக்கையின் பிறப்பிடம், என சொல்லவோ ஆயிரம்   வார்த்தைகள்  உண்டுஅவை அனைத்தும்  எங்க யோக் நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு!