பு கிருஷ்ணவேணி, அ ராஜேஸ்வரி – யோக் டிஎன்பிஎஸ்சி மாணவர்கள் – கற்பனை

இப்போ 2042ம் ஆண்டு. 20 வருஷம் கழிச்சி என் ஊருக்கு போற வாய்ப்பு எனக்கு கிடைச்சிச்சு. எங்க ஊர்ல நான் படிச்ச யோக்-அமைப்புல இருந்து எனக்கொரு அழைப்பு வந்திருக்கு. அது எதுக்குன்னா “முன்னாள் மாணவர்கள் சந்திப்பு” அப்படின்னு நிகழ்ச்சி அரேஞ்ச் பண்ணிருக்காங்க. இப்போ அதுக்காகதான் எங்க ஊருக்கு போயிட்டு இருக்கேன்.

போற வழியில நல்ல சிலு சிலுன்னு காத்து அடிக்குது. என்னடா காத்து இப்படி இதமா இருக்கு, ஒரு வேளை வண்டில ஏ சி ஆன்ல இருக்கோ அப்படினு ஈ-கார்ல செக் பண்ணி பார்த்தேன். ஆனா ஏ சி ஆப்லதான் இருக்கு. அப்புறம் எப்படி இந்த இதமான காத்துன்னு நினைச்சிகிட்டே வெளிய எட்டி பார்த்தா வழியெல்லாம் எக்கச்செக்கமா மரம் நட்டு வச்சிருக்காங்க. அதுலயும் புங்க மரம்தான் அதிகமா இருந்தது.

அடுத்த ஆச்சிரியமா பயிரெல்லாம் மஞ்ச மஞ்சேன்னு என் உயரத்துக்கு வளர்ந்திருக்கு. இதெல்லாம் எப்படி நடந்திருக்கும்னு யோசிச்சுகிட்டே போயிட்டு இருந்தேன். வழியில எங்க சித்தப்பாவ பார்த்தேன். சித்தப்பாகிட்ட நலம் விசாரிச்சிட்டு, என்ன கதைன்னு நான் பார்த்தத பத்தியெல்லாம் கேட்டேன். அதுக்கு எங்க சித்தப்பா சொன்னுச்சி, புங்க மரமெல்லாம் இப்போ அதிகமா பயோ-காஸ் தயாரிக்கப் பயன்படுது. அதான், அப்புறம் இந்தப் பயிரெல்லாம் வளர காரணம் நம்ம ஊரு அக்ரி ஸ்டூடெண்ட்ஸ் தான். அவங்கல்லாம் களம் இறங்கி செஞ்ச வேலைதான் இப்படி வளந்திருக்கு. அதுக்கு இந்த கோடைல நீர் எப்படி இருந்திச்சு, எப்படி பாசனம் செய்யறாங்கன்னு கேட்டேன். அதுக்கு சொல்றாங்க சித்தப்பா, எல்லாம் அவங்களோட ஐடியாஸ்தான். அதில அவங்க கண்டு பிடிச்ச உரம்தான் போடறோம். தண்ணிய சிக்கனமா செலவு செய்யறோம். அப்படி என்ன உரம் சித்தப்பான்னு கேட்டேன். அது என்னன்னா தாவர கழிவுகள், ஆட்டுச்சாணம், மாட்டுச் சாணம் இதெல்லாம்தான் அப்படின்னு சொன்னாங்க சித்தப்பா. அப்போ மாடு இருக்கான்னு கேட்டேன். மாடு இருக்காவா? பெரிய பண்ணையே இருக்கு, வா, காட்டுறேன்னு சொல்லி கூட்டிட்டு போனாங்க.

போற வழியில ஒரு புது கட்டடம் பார்த்தேன். என்ன சித்தப்பான்னு கேட்டா, அது பால் பொருட்கள் தயாரிக்கற தொழிற்கூடமாம். இங்கதான் எங்க பண்ணை பாலெல்லாம் கொடுக்குறாங்களாம். வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி ஆகுதாம்.


Art by Mr Mariappan, Art teacher, Govt Girls High School, Nadukallur

அப்படி போயிட்டே இருக்கும் போது பார்க்க பூங்காமாரி இருந்த ஒரு இடத்த பார்த்தேன். ஆனா முந்தி அந்த இடத்துல நான் படிச்ச ஸ்கூல் இருந்தது. என்ன விவரம்ன்னு எங்க சித்தப்பாவ கேட்டேன். அது எங்க பள்ளிக்கூடம்தானாம். இப்போல்லாம் மனப்பாட முறையே கிடையாதாம். ஒரே பிராக்டிகல்தான் நடக்குதாம். அவங்களுக்கு புடிச்சததாம் அவங்க படிப்பாங்களாம். சரி அப்போ பரிட்சை எப்படின்னு கேட்டேன். பார்த்தா, பரிட்சையே கிடையாதாம். ஹோம் வர்க்கும் கிடையாதாம். அப்போ எப்படி அவங்கலாம் அடுத்த லெவெல் போவாங்கன்னு கேட்டேன். அதுக்கு சித்தப்பா சொன்னிச்சு, எல்லாமே கேம் மூலம்தான், அவங்க தெரிஞ்சுகிட்டத அந்த கேம்-ல எவ்ளோ யூச் பண்றாங்கன்றத பார்த்துதான் அவங்களோட அடுத்த லெவெல் போகுமாம். அப்போ தனியார் ஸ்கூல் மாறி ஆயிட்டுபோலன்னு சொன்னேன். அப்புறம்தான் தெரிஞ்சது தனியார் ஸ்கூலே கிடையாதாம். அரசாங்க பள்ளிக்கூடம் மட்டும்தானாம்!

சரி, வீட்டுக்கு போவோம்னு கிளம்பி வீட்டுக்குப் போனா, காட்டுக்குள்ள வீடு இருக்கா, இல்ல வீட்டுக்குள்ள காடு இருக்கான்னே தெரியல. சுத்தி ஒரே மரம். இந்த இடத்துல முந்தி எல்லாம் கருவேல மரம்தான் இருந்துச்சி. இப்போ ஒரே நம்ம நாட்டோட பாரம்பரிய மரம்தான் நிறைய இருக்குன்னு நானும் எங்க சித்தப்பாவும் பேசிகிட்டு இருக்கும்போது திடீருன்னு மழை பெய்ய ஆரம்பிச்சிட்டு. சரி வாங்க, வீட்டுக்குள்ள போவோம்னு உள்ள போய் வேகமா எமர்ஜன்சி லைட் எடுத்து பக்கத்துல வச்சிக்கிட்டேன், ஏன்னா மழை வந்தாலே கரெண்ட் கட் ஆகிரும்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா ஆச்சரிய படுற மாதிரி கரெண்ட் கட்டாகவே இல்லை. சித்தப்பா சொன்னாங்க, இப்பல்லாம் கரெண்ட் கட்லாம் கிடையாதாம், காரணம் என்னன்னா இங்க எல்லார் வீட்டிலையுமே ஸோலார் பவர் பயன்படுத்தறாங்களாம். அதுபோக குப்பையையும் பயன் படுத்தறாங்களாம். எனக்கு ஷாக் ஆகிட்டு. உபயோகம் இல்லாத பொருளதான் குப்பைனு சொல்லுவோம், நீங்க என்னன்னா குப்பையவே யூஸ் பண்றோம்னு சொல்றீங்க, எப்படின்னு கேட்டேன். குப்பையிலிருந்து பயோ காஸ் எடுத்துட்டு, மிச்சத்த உரமாக்கிருவோம்னு சொன்னாங்க,

பேசிகிட்டு இருக்கும்போதே மழை நின்னுட்டு. சரி வாங்க கோயிலுக்கு போவோம். எப்படியும் வழியெல்லாம் ஒரே தண்ணி தேங்கி கிடக்கும் அப்டின்னு நினைத்திட்டு போய் பார்த்தேன், ஆனா ஒரு சொட்டு தண்ணீ கூட தேங்கல. எப்டின்னு கேட்டா இங்க சாலையோட அமைப்பே தண்ணி எல்லாத்தையும் நிலத்தடி நீரோட சேர்ர மாதிரி கட்டிருக்காங்களாம். சரி அப்போ வீட்டுக்கு ஸோலார், ரோட்டுக்கு? அப்படின்னு கேட்டேன். அதுக்கு தனியா காற்றாலை ரோட்டுக்கு ஒண்ணுன்னு இருக்காம். சரி, வாங்க கோயிலுக்குப் போவோம்னு கிளம்பினோம். திடீருன்னு டபடபடபன்னு ஒரே சத்தம். என்னடான்னு வானத்தை பார்த்தா நெறைய ஹெலி-கார் வந்து இறங்குது. யாரோ ஒரு விஐபி வந்திருக்காங்கன்னு தெரியுது, ஆனா அது யாருன்னு தெரியல. சரி நாம போய் சாமி கும்புடுவோம்னு உள்ள போய் நின்னுட்டு இருந்தோம். அந்த விஐபி என்னன்னா என் பின்னாடியே நிக்குறாங்க. பொதுவா விஐபின்னாலே முன்னாடி விறுவிறுன்னு போயிருவாங்க. ஆனா இப்போ அது நடக்கல. ஏன்னு சித்தப்பாட்ட கேட்டேன். அதுக்கு சித்தப்பா சொல்றாரு இப்போல்லாம் பொது தரிசனம்தான், எல்லாருக்குமேன்னு. பிரகாரத்த சுத்தும் போது ஒரு அரங்கத்துல கோவிலோட தல வரலாறு, ஓவியம்லாம் இருந்தது. அந்த ஸ்கிரீன் தொட்டா ஆடியோ விடியோ மூலம் விவரத்தலாம் சொல்லுது.

அப்படியே வெளிய வந்தப்போ எங்க சித்தப்பா அறுவடைனால எனக்கு வேல இருக்குமா, நீ மீட்டிங் போயிட்டு வா, நாம் அப்புறம் பேசுவோம்னு சொன்னுச்சி. அறுவடை வந்துட்டா அப்போ ரோடெல்லாம் அவ்ளோதான் மறுபடியும் குண்டும் குழியுமாயிரும்னு சொன்னேன். அதுக்கு சித்தப்பா சொல்றாரு இப்போலாம் டிராக்டர் யூஸ் பண்றதே கிடையாதாம். உழுறதுக்கு வல்லுனர்கள் கண்டு பிடித்த மிஷின் பயன்படுத்தி உழுறொம். அது மூலம் நல்ல எக்ஸர்ஸைஸ் பண்ற மாதிரியும் இருக்கு. அதான் நாங்கல்லாம் இவ்ளோ பிட்டா இருக்கோம். முன்னல்லாம் ஜன்க் புட் சாப்டு தொப்பை, குண்டுன்னு ப்ரச்னை இருந்துச்சு. இப்போ அதே டேஸ்ட்ல எங்க ஊர் பெண்கள் குழு தரமான பொருளால செய்றாங்க, நாங்கல்லாம் ஆரோக்யமா இருக்கோம். அப்புறம் இந்த ரோட்ல டிராக்டர் போனாலும் ஒன்னும் ஆகாது, ஏன்னா இது அந்த அளவுக்கும் ஸ்ட்ராங்கா போட்டிருக்கு. இந்த ரோட் போட்டு 5 வருஷம் ஆச்சி, தெரியுமா? அப்படின்னு சொன்னாக.

சரி சித்தப்பா, ஒரு பக்கம் தொழில் டெவெலப் ஆயிட்டு இருக்கு, இன்னொரு பக்கம் ஆறு கடல் மாதிரி கரபுரண்டு ஓடுது, அதுல போட் வேற உட்டீங்க போல – என்ன சேரன்மகாதேவிக்கு ஷார்ட்-கட்டான்னு கேட்டேன். ஆமா, இப்போல்லாம் யாரும் சுத்தி போறதுல்ல. எல்லாரும் இந்த வழியாதான் போயிட்டு வாராங்கன்னு சொன்னாங்க.

சரி நான் மீட்டிங் போறேன் பை சித்தப்பான்னு சொல்லிட்டு யோக்குக்கு போனேன். போற வழியில பெரிய பெரிய மரம், அதுல எல்லாம் மர வீடு கட்டி வச்சிருக்காங்க. அங்கங்க க்ளாஸ் நடந்திட்டு இருக்கு. யோக்ல பார்த்தா நூற்றுக்கணக்கான பேர் வந்திருக்காங்க. நம்ம படிக்கும் போது 30-35 பேர்தன்னு நினைச்சா, இதே மாதிரி பக்கத்துல நெறைய செண்டர் கொண்டு வந்துட்டாங்களாம். அதான் இவ்ளோ கூட்டமாம்.

இந்த மீட்டிங்கிற்கு சீப் கெஸ்ட் டெல்லியிலிருந்து வந்திருக்கும் கேபினெட் செக்ரடரி நம்ம விஷ்ணு சார்! அவங்ககிட்ட, எல்லாரிட்டயும் பேசிட்டு சந்தோஷமா வீட்டுக்கு போய் எங்க ஊரோட மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்தேன். அதையெல்லாம் பாத்து பிரமிச்சு போனத சொல்ல வார்த்தை இல்ல, அதனால 20 வருஷம் கழிச்சி நீங்களே வந்து பார்த்து தெரிஞ்சிக்கோங்க!