by A Nangai Rani, III year B.Com
எனக்கு முன்னால் ஆண்டுப் பிரிவு அக்காமார்கள் யோக்கிற்கு வந்து அக்கா , சார் இருவரிடமும் ஆங்கிலம் மற்றும் கணக்கு படித்தார்கள் . அவர்கள் நல்ல மதிபெண்கள் எடுத்தார்கள். அதை பார்க்கும் போது நானும் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் பிறகு நான் பத்தாம் வகுப்பு 2016 ஆண்டு படித்தேன். நான் யோக்கில் ஆங்கிலம் மற்றும் கணக்கு படிக்க வந்தேன். ஒரு நாள் ஆங்கில வகுப்பு ஒரு நாள் கணக்கு வகுப்பு படித்தேன் . ஆங்கிலம் அக்கா சொல்லி கொடுப்பார்கள். ஆனால் எனக்கு ஆங்கிலம் வாசிக்க வராது. அக்கா நல்ல பொறுமையாக எனக்கு சொல்லி கொடுத்தார்கள் . சார் எனக்கு கணக்கு நன்றாக புரியும் வரை பொறுமையாக சொல்லி கொடுத்தார்கள் . நான் பள்ளி முடித்த பிறகு மாலை யோக் வருவேன். அப்போது வகுப்புகள் நடைபெற்றன . மார்ச் 15 தேதி தேர்வு ஆரம்பம் ஆகியது . மார்ச் 14 அன்று யோக் சார், அக்கா அருகில் உள்ள பெருமாள் கோவிலில் நாங்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பூஜை பண்ணினார்கள் . அக்கா சார் இருவரும் தேர்வு எழுத வாழ்த்துக்கள் சொன்னார்கள் . தேர்வு நன்றாக எழுதினேன் . 25.5.2016 தேர்வு முடிவு நாள் . அன்று என் நண்பர்கள் கூட கோவில் சென்று வணங்கினோம். 9.00 மணி அளவில் தேர்வு விடை வந்தது. ஆங்கிலத்தில் 66 மதிப்பெண்கள் கணக்கில் 85 மதிப்பெண்கள், மொத்தம் 422 எடுத்தேன் . நான் இவ்வளவு மதிப்பெண்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது . என் குடும்பத்தில் இத்தனை மதிப்பெண்கள் யாரும் எனக்கு முன்னால் எடுத்ததில்லை. என் அம்மா என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார்கள். அது எனக்கு இன்னும் பெரும் மகிழச்சி அளித்தது .
அதன் பிறகு நான் 11ம் வகுப்பில் வணிகவியல் பாடங்களை தேர்ந்தெடுத்தேன். அதில் கணக்குப்பதிவியல் என்ற பாடம் வந்தது. அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. யோக் சார் ஒவ்வொன்றாக கற்று கொடுத்தார்கள் . சார் கற்று கொடுத்தது நன்றாக புரிந்தது, பள்ளியில் என் நண்பர்களுக்கு நான் கற்று கொடுத்தேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
12ம் வகுப்பிலும் யோக் சார்ரிடம் கணக்குப்பதிவியல் கற்று கொண்டேன் . பள்ளி முடிந்த பிறகு கணக்குபதிவியல் வகுப்பு நடைபெற்றது . 26.4.2018 அன்று கணக்குபதிவியல் தேர்வு நடைபெற்றது . தேர்வு நன்றாக எழுதினேன் . 200 மதிப்பெண் வரும் என்று நம்பினேன் . 19.5.1018 அன்று தேர்வு முடிவு நாள் . நான் மதிப்பெண்ணை எதிர்பார்த்து காலை 10.00 மணி வரை காத்து இருந்தேன். கணக்குப்பதிவியலில் 200 மதிபெண்கள் எடுத்தேன் . 1027 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாவது இடம் எடுத்தேன் . எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
என்னாலும் முடியும் என்று நான் என்னையே அறிந்து கொண்ட அந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாகும்.