Pakkiaraj, Cheranmahadevi (Feb 2016)
இளைய தலைமுறையின் வீர வேகத்தை வெளிக்கொணர உதவிய, எமது அன்பான யோக் குழுமத்திற்கு “வணக்கம்”.
இறைவனால் படைக்கப்பட்ட விதை அனைத்தும் மழையை எதிர்பார்த்து இருப்பது போல், நாங்களும் இருந்தோம். எனக்கு வயது 35-ஐ தொடப்போகிறது. நான் எனது மாரத்தான் ஓட்டத் திறமையை வெளிபடுத்த, நாகர்கோவில், கோவில்பட்டி, காயல்பட்டினம், நெல்லை, பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளேன். நமது ஊரில் நீங்கள் மாரத்தான் நடத்தியதில் மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில் இவை எல்லாம் வளர்ந்த நகரம். அப்போது என் மனதில் ஓர் எண்ணம், நம் ஊரில் நடந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்ற என் கனவு, உங்கள் மூலம் நிறைவேறியது. 2 வருடத்திற்கு முன் சிறிதளவே ஓட்டபந்தய வீரர்கள் இருப்பதாக நினைத்தேன், ஆனால் நமது யோக் மூலம் ‘சிறிதளவு அல்ல எண்ணற்ற வீரர்கள் உள்ளனர்’ என்பதை உணர்ந்தேன், அதற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
யோக் நடத்தும் இந்நிகழ்ச்சி, பல தலைமுறைகளை வளர்க்க வேண்டும், என்பது என் கனவு. நமது இல்லத்தில் ஒரு திருமணம் நடப்பதாக வைத்து கொள்வோம். அந்த நிகழ்ச்சிக்கு, நமது உறவினர், மற்றும் நண்பர் என்ற முறையில் இருவர் கலந்து கொள்வார்கள். இருவர் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பல குறைகளை உரைப்பர். அப்படி இருக்கும் போது யோக் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு குறைந்தது, 1000 நபர்கள் பங்கேற்றனர். உறவினர், நண்பர்களே குறை கூறும்போது, யார் என்று தெரியாத 1000 பேர்களில் சிலர் குறை கூறுவது இயல்பு. உங்களது பெருமைகளையும், அருமைகளையும், அதில் உள்ள கஷ்டங்களையும் (உங்கள் சொந்தங்களான) நாங்கள் அறிவோம். எங்களது சந்தோஷமும், வெற்றியும் உங்களுக்கே.
குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி(கண்ணா) யோக்!
நெஞ்சார்ந்த நன்றிகள் பல...